அருப்புக்கோட்டையில் ராட்டினம் உடைந்து
கீழே விழுந்து விபத்து: பள்ளி மாணவர் சாவு –
2 வாலிபர்கள் காயம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை,
சொக்கலிங்கநகரில் உள்ள சொக்கநாதர்
கோவிலில் கடந்த 10 நாட்களாக திருவிழா
நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற
இந்த கோவில் திருவிழாவையொட்டி அங்குள்ள
ஒரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
பொருட்காட்சி ஏற்பாடு அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் சிறுவர்கள், பொது மக்களை கவரும்
வகையில் பல்வேறு வகையான
ராட்டினங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள்
அமைக்கப்பட்டு இருந்தன.
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் கண்ணன்.
இவரது மகன் சூர்யா (வயது 12).
இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனது
பாட்டி வீட்டில் தங்கி இருந்து
அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7–ம் வகுப்பு
படித்து வந்தான்.
நேற்று இரவு சூர்யா சொக்கநாதர் கோவில்
திருவிழாவுக்கு சென்றுசாமி தரிசனம்
செய்து விட்டு அங்குள்ள பொருட்காட்சிக்கு
சென்றான். பின்னர் அங்குள்ள
கப்பல் ராட்டினத்தில் சூர்யா ஏறியுள்ளான்.
ராட்டினத்தின் முனையில் இருந்த இருக்கையில்
சூர்யா அமர்ந்துள்ளார்.
அவரது அருகிலேயே அருப்புக்கோட்டை
எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (23),
ஜோதிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர்
அமர்ந்துள்ளனர்.
சிறிது நேரத்தில் ராட்டினம் இயங்க தொடங்கியது.
மின்னல் வேகத்தில்
மேலும், கீழும் சென்று வந்தது. எல்லோரும்
உற்சாக குரல் எழுப்பிக் கொண்டு
இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சூர்யா,
கார்த்திக், ராஜேஷ் ஆகியோர் அமர்ந்திருந்த
இருக்கைகள் உடைந்தது. இதில் கீழே விழுந்த
சூர்யா ராட்டினத்தின் கீழ்
பொருத்தபட்டிருந்த எந்திரத்தின் மீது விழுந்து
தலையில் பலத்த காயமடைந்து
அங்கேயே இறந்தார்.
ராஜேஷ், கார்த்திக் ஆகியோர் ராட்டினத்தில்
இருந்து சிறிது தூரம் தள்ளி விழுந்து
படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள்
2 பேரையும் மீட்டு மதுரை
அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யாவின் பெற்றோர்
அருப்புக்கோட்டைக்கு
விரைந்து வந்தனர். அவர்கள் மகனின் உடலை
பார்த்து கதறி அழுதது
பரிதாபமாக இருந்தது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு
சூர்யாவின் உறவினர்கள்
திருச்சுழி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ரங்கசாமி,
அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர்
முருகேசன் ஆகியோர் அவர்களிடம்
சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து
அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராட்டின உரிமையாளர்
தஞ்சாவூரை சேர்ந்த
சந்திரசேகர், பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள்
என 3 பேர் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராட்டின விபத்தில்
மாணவர் உயிரிழந்தது
அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment