பாரதப் பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை
நேற்று தொடங்கி வைத்து கொண்டிருக்கும் போது
ராஜஸ்தானை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து ஒன்று
பெண்கள் செல்போன், சமூக வலைதளங்கள் மற்றும்
 ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதித்திருப்பதாக செய்தி
வெளியாகியுள்ளது.

அம்மாநிலத்தை சேர்ந்த பார்மர் பகுதியில் உள்ள கிராமத்தில்
 பெண்கள் மொபையில் போன், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற
சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், ஜீன்ஸ்
அணியக்கூடாது என்றும் கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருமணத்தின் போது ஆண்கள் வேட்டி மட்டுமே
அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பஞ்சாயத்தில் சில நல்ல உத்தரவுகளும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தை திருமணம்
மற்றும் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு
பிறகும் கட்ட பஞ்சாயத்துகள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பது
அரசுகளின் தோல்வியாகவே கருதப்படுகிறது.

Post a Comment

 
Top