லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள். பிரச்சினையால்
இனி படமே இயக்கமாட்டேன் என்று கே.எஸ். ரவிக்குமார்
சொன்னதாக செய்திகள் வந்தன. அது சிறகு முளைத்த வதந்தி
என்று இப்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால்
ரவிக்குமார் இப்போது ஒரு கன்னடப்படம் இயக்குகிறார்.
நான் ஈ வில்லன் சுதீப்தான் கதாநாயகன் கதாநாயகி
இன்னமும் இறுதியாக வில்லை டி.இமான் இசையமைக்கிறார்.
இது முன்பே திட்டமிடப்பட்டதாம், இடையில் அவசரமாகச் செய்ய
வேண்டுமென்று லிங்கா படம் குறுக்கிட்டதால் இப்படம் தாமதமானதாம்.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் படப்பூஜை போடப்பட்டு
படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு உள்ளது.இது ஒரு ஆக்ஷன் படமாகும்..
திகில், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாமே கலந்த பக்கா
கமர்ஷியல் கொத்து பரோட்டடாவாக இந்தப்படம் இருக்குமாம்.
முதலில் கன்னடம், தமிழ் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தெலுங்கிலும் உருவாகலாம்.
கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா சமந்தா, தமன்னா, ஹன்சிகா
போன்ற சிலர் பரிசீலனையில் உள்ளனர். கதாநாயகி முடிவானதும்
தெலுங்கிலும் வடிவம் பெறும் என்கிறார்கள். இது தவிர இன்னொரு
படத்தின் விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல
தனுஷ் நடிக்கும் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்திலும் தனுஷின்
அப்பாவாக ரவிக்குமார் தான் நடிக்கிறார்.
ஆக ரவிக்குமார் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்.

Post a Comment